Skip to content
தோரை

தோரை என்பது ஒரு வகை நெல்

1. சொல் பொருள்

(பெ) ஒருவகை மலைநெல், மூங்கிலரிசி, மூங்கில்நெல் ; கைவரை ; இரத்தம், உதிரம் ; மங்கல்நிறம் ; ஒருபனை வகை, செங்காய்கொண்ட பனை வகை ; மயில்விசிறி ; நான்கு விரற்கிடையுள்ள நீட்டலளவை ; அணிவிடம்

2. சொல் பொருள் விளக்கம்

ஒரு வகை மலை நெல்லைத் ‘தோரை’ என்றனர். மதுரைக்காஞ்சியில் ‘வித்திய குறுங்கதிர் தோரை’ என்ற வரிகளில் மேட்டு நிலத்தில் குறுகிய கதிர்களையுடைய ‘தோரை’ என்னும் நெல் விளைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

தோரை
தோரை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

A kind of paddy raised in hilly tracts, A palmyra tree producing reddish fruit, Blood, A standard linear measure, of four fingers’ breadth, Bamboo seed, Lines on the palm and the fingers of the hand, Bunch of peacock’s feathers, used as a fan, Strings of jewels, a garland of jewels, Pale reddish colour

Oryza sativa

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

தோரை
தோரை
புயல் புனிறு போகிய பூ மலி புறவின்
அவல் பதம் கொண்டன அம் பொதி தோரை 
தொய்யாது வித்திய துளர் படு துடவை - மலை 120-122

மழையால் கசடுகள் நீக்கப்பட்ட, பூக்கள் நிறைந்த காட்டுநிலத்தில், 120
அவல் இடிக்கும் பக்குவம் பெற்றன, அழகிய கொத்துக்கொத்தான மலைநெல்

குறும் கதிர் தோரை நெடும் கால் ஐயவி - மது 287

அலங்கல் தாது அவிழ்ந்து சோர அல்குல் பொன் தோரை மின்ன - சிந்தா:10 2132/1
தோரை மலர் நீர் அறுகு துளும்பும் மணி தாலம் - சிந்தா:12 2489/1

நெல்லும் நீர் விளை கேழலும் தோரையும்
அல்ல தீம் பழம் காய் கிழங்கு ஆதியா - சிந்தா:6 1422/2,3

சூழ் விளை ஏனலும் பரியும் தோரையும்
கூழ் விளை குலுத்தமும் இறுங்கும் கோத்து இரு - தேம்பா:18 3/1,2

பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கி போர் வேடர் கோமானை போற்றி நின்றாள் - 3.இலை:3 48/4

தணி பொன் தோரை தகை ஒளி சுடர - உஞ்ஞை:34/205

தோரையும் துவரையும் ஆயவும் பிறவும் - உஞ்ஞை:49/108
தோரை
தோரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *