சொல் பொருள்
(பெ) ஒரு பேரெண்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு பேரெண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a large number
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புகழ் சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும் அமுது கடைய இரு வயின் நாண் ஆகி மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் அறாஅது அணிந்தாரும் தாம் – பரி 23/73-77 புகழ்மிக்க சிறப்பினையுடைய தேவரும் அசுரரும் ஆகிய இருதிறத்தோரும் அமுது கடைய இரு பக்கமும் நாணாக இருந்து, எஞ்சிய பெரிய நாணை திருமாலே பற்றி இழுக்க, தமது அழியாத ஆற்றலாலே, ஒரு தோழம் என்னும் கால அளவுக்கு அற்றுப்போகாமல் நாணாகி கிடந்து அழகுசெய்தவரும் ஆதிசேடனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்