சொல் பொருள்
நண்டு – ஓடி ஆடித் திரியும் பிள்ளைகள்.
சிண்டு – ஓடி ஆடித் திரியாமல் தவழ்ந்தும் ஊர்ந்தும் திரியும் பிள்ளைகள்.
சொல் பொருள் விளக்கம்
நண்டும் சிண்டுமாகத் திரிகின்றன. நண்டுஞ்சிண்டுமாகப் பல பிள்ளைகள் என்பன வழக்குகள். சிண்டு, சுண்டு எனவும் வழங்கும். நண்டு, சிண்டு என்பவை பெரிய நண்டு, நண்டுக் குஞ்சு என்பவற்றைச் சுட்டி, அத்தகு குழந்தைகளைக் குறிப்பதாயிற்றாம். சிண்டு, சுண்டு என்பவை சிறியது என்னும் பொருள் தரும் சொற்கள். சிறுகுடுமியைச் சிண்டு என்பதையும், சிறுகாயைச் சுண்டைக் காய் என்பதையும் கருதுக. “ சுண்டைக்காயைச் சுரைக்காய் ஆக்கிவிட்டானே” என்பதும் விளக்கும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்