சொல் பொருள்
(பெ) மகத நாட்டு மன்னர்,
சொல் பொருள் விளக்கம்
மகத நாட்டு மன்னர், நந்தர் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு அரச மரபினர் ஆவர். இவர்கள் கிமு 4-ஆம் நூற்றாண்டுகளில் மகத நாட்டை ஆண்டுவந்தனர். நந்த மரபின் கடைசி மன்னன் தன நந்தன் என்பவன் ஆவான். கங்கையாற்றின் அடியில் பெரும் செல்வத்தை மறைத்து வைத்ததாக இங்குக் குறிப்பிடும் நந்தன் இவன் ஆகலாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
The kings who ruled the Magadha country in North India during 4th C B.C
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் சீர் மிகு பாடலி குழீஇ கங்கை நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ – அகம் 265/4-6 பல்வகைப் புகழும் மிக்க போர் வெல்லும் நந்தர் என்பாரது சிறப்பு மிக்க பாடலிபுரத்திலே திரண்டிருந்து கங்கையின் நீர் அடியில் மறைத்துவைத்த செல்வமோ?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்