Skip to content

சொல் பொருள்

(பெ) 1. இனிமை, 2. நயப்பாடு, சிறப்பு, 3. கொள்கை, நியதி, 4. அன்பு, பரிவு, 5. நன்மை, 6. அருள்,

சொல் பொருள் விளக்கம்

இனிமை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sweetness, excellence, superiority, policy, principle, love, tenderness, goodness, grace

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நைவளம் பழுநிய நயம் தெரி பாலை – சிறு 36

நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை

நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி
விறலியர் – மது 217,218

(யாழ்)நரம்பைப் போல் பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய
விறலியர்

ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர்
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக
மழை அமைந்து உற்ற அரைநாள் அமயமும்
அசைவு இலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் – மது 647-650

ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்;
தேர் ஓடும் தெருவில் நீர் திரண்டு ஒழுகும்படி
மழை நின்று-பெய்த (இரவின்)நடுநாளாகிய பொழுதினும்,
சோம்பலற்றவராய்ப் புறப்பட்டு நியதி உணர்வு தோன்ற சுற்றிவருதலால்,

தம்மோன் கொடுமை நம்_வயின் எற்றி
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
கண்ணீர் அருவி ஆக
அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றே – நற் 88/6-9

தனது தலைவன் நமக்குச் செய்த கொடுமைக்காக நம்மேல் பரிவுகாட்டி
நம்மீது அன்பு மிகவும் உடையதால், தன் வருத்தத்தைத் தாங்கிக்கொள்ளமாட்டாமல்
கண்ணீர் அருவியாகப் பெருகும்படி
அழுகின்றது தோழி! அவரின் பழங்கள் முதிர்ந்த குன்று

நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை – பரி 3/33,34

அவுணர்களின் மகிழ்ச்சியே அவர்களுக்கு அச்சமாக மாற, தேவர்களுக்கு நல்ல அமிழ்தத்தை வழங்கிய
நடுவுநிலைமையிலிருந்து தவறிய நலமில்லாத ஒரு கை

இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே_இழாய்
செய்ததன் பயம் பற்று விடாது
நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே – கலி 59/24-26

செய்த கொடுமைக்கு நீ ஓர் உதவியைச் செய்யாது போனால், சிவந்த அணிகலன் அணிந்தவளே!
நீ செய்ததன் பயன் உன்னைப் பற்றாமல் விடாது,
உன்னை விரும்புவோரிடம் காட்டவேண்டிய அருளை நீ கைவிட்டால், அது உனக்குப் பயன்தருதலும் இல்லை.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *