Skip to content
நறவம்

நறவம் என்பது ஒரு மலர்

1. சொல் பொருள்

(பெ) 1. ஒரு வாசனைக் கொடி, பூ; 2. கள்; 3. தேன் ; 4. மணம்

2. சொல் பொருள் விளக்கம்

நறவம்பூ கொத்துக்கொத்தாகப் பூக்கும். நறவம் என்னும் சொல் மலரிலுள்ள தேனை உணர்த்துகிறது. நறவு, நறாஅ, நறா என்னும் சொற்கள் ஒருவகைக் கள்ளை உணர்த்துவன.

  • இப்பூவை மாலையாகத் தொடுத்து அணிந்துகொள்வர்
  • இப்பூ முல்லைப் பூவோடு சேர்ந்தும் பூத்திருக்கும்
  • இப்பூ கைவிரல் விரிவது போலப் பூத்திருக்கும். 
  • இப்பூ குளுமையானது
  • நீராடிய பின்னர் நறையைப் புகைத்துக் கூந்தலை உலர்த்துவர்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a fragrant creeper, its flower, Indian lavanga, Luvunga scandens, Bixa Orellana?, Osmanthus fragrans?, Achiote? , Skimmia japonica?, toddy, honey

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நந்தி நறவம் நறும் புன்னாகம் – குறி 91

நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை – பரி 12/80

உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம் – பரி 19/78

நார் அரி நறவம் உகுப்ப – பரி 6/49

நார்க்கூடையால் அரிக்கப்பட்ட கள்ளின் சிந்திய பாகங்களும் வெள்ளத்தில் சேர்ந்துவர

நந்தி நறவம் நறும் புன்னாகம் - குறி 91

நார் அரி நறவம் உகுப்ப நலன் அழிந்து - பரி 6/49

நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை - பரி 12/80

உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம்/பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம் - பரி  19/78,79

வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம்/யாம் தனக்கு உறு முறை வளாவ விலக்கி - புறம் 292/1,2

தவழும் கொடி முல்லை புறவம் சேர நறவம் பூத்து - தேவா-சம்:489/3

பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும் - தேவா-சம்:725/3

வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு - தேவா-சம்:731/3

நறவம் நிறை வண்டு அறை தார் கொன்றை நயந்து நயனத்தால் - தேவா-சம்:798/1

நறவம் ஆர் பொழில் புறவம் நல் பதி - தேவா-சம்:976/1

பொடியார் மெய் பூசினும் புறவின் நறவம்
குடியா ஊர் திரியினும் கூப்பிடினும் - தேவா-சம்:1288/1,2

நறவம் கமழ் பூம் காழி ஞானசம்பந்தன் - தேவா-சம்:2156/1

நறவம் மிகு சோலை கொச்சைவயம் தராய் நான்முகன்-தன் ஊர் - தேவா-சம்:2229/2

நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள் மலர் அவை வாரி - தேவா-சம்:2665/1

நறவம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாகேச்சுரத்து - தேவா-சம்:2760/3

நஞ்சு அடை கண்டனாரை காணல் ஆம் நறவம் நாறும் - தேவா-அப்:218/2

நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை - தேவா-அப்:389/3

நறவம் நாறும் பொழில் திரு நள்ளாறன் - தேவா-அப்:1754/3

நறவம் நாறிய நன் நறும் சாந்திலும் - தேவா-அப்:1977/3

நறவம் பூம் பொழில் நாவலூரன் வனப்பகை அப்பன் சடையன்-தன் - தேவா-சுந்:350/2

வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை ஆர் நறவம்
ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று மந்தம் முரல் வண்டு - திருவா:6 36/2,3

தெள்ளி நறவம் திசைதிசை பாயும் மலை சிலம்பா - திருக்கோ:128/2

சாதி மாலதிகள் எங்கும் தண் தளிர் நறவம் எங்கும் - 1.திருமலை:2 29/2

நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞானசம்பந்தர் - 6.வம்பறா:1 957/1

மதுகர மிடைந்து வேரி தரு நறவம் உண்டு பூக மலர் வள நிறைந்த பாளை மலரூடே - திருப்:210/5

கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே - திருப்:940/3

கலன் நனி நறவம் சிந்தும் கனியினும் கனிந்த பாவை - சீறா:609/4

பார்த்த கண் பறித்து வாங்கப்படாமையால் நறவம் சிந்த - சீறா:637/1

குயில் நிழல் பரப்ப செவ்வி கொழும் தொடை நறவம் சிந்தும் - சீறா:2052/1

ஏட்டு அலர் நறவம் மாந்தி இரும் சுரும்பு இசைக்கும் தோற்றம் - சீறா:2066/1

புது கடி நறவம் சிந்தும் பூம் குழல் மாலை சோர - சீறா:3172/3

அத்திரி அலைத்த கொம்பின் அலர்களில் நறவம் மாந்த - சீறா:4725/1

நறவம் சாரல் குறவர் பரீஇய - உஞ்ஞை:51/20

நல் சினை நறவமும் நாகமும் நந்தியும் - இலாவாண:20/60

களி நறவம் தாது ஊத தோன்றிற்றே காமர் - புகார்:6/177

நறவம் கொப்புளித்தலின் நாகு புன்னை பூத்தன - சிந்தா:1 74/2

வண்டு மூசு அறா நறவம் ஆர்ந்தவர் - சிந்தா:2 418/1

ஆய்ந்து அரிக்கும் நறவம் மலர் மாலையை - சிந்தா:7 1769/3

ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி - பால:2 1/3

தெள் விளி சீறியாழ் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி - பால:2 8/1

கோதைகள் சொரிவன குளிர் இள நறவம்
பாதைகள் சொரிவன பரு மணி கனகம் - பால:2 51/1,2

பொடித்த வேர் புறத்து உகு நறவம் போன்றவே - பால:19 22/4

செம் கயல் நறவம் மாந்தி களிப்பன சிவக்கும் கண்ணார் - அயோ:3 69/3

பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் - கிட்:7 132/2

கோய் சொரி நறவம் என்ன தண் புனல் உகுக்கும் குன்றின் - யுத்1:8 25/2

மூடிய நெய்யொடு நறவம் முற்றிய - யுத்3:27 51/1

உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும் - யுத்3:27 173/1

வண்டினின் பொலியும் நல் யாழ் வழியுறு நறவம் வானத்து - யுத்3-மிகை:22 1/3

தமிழ் நிகர் நறவமும் தனி தண் தேறலும் - கிட்:14 35/2

நிந்தனை நறவமும் நெறிஇல் ஊன்களும் - யுத்1:4 97/1

மனம் குழை நறவமோ மாலைதான்-கொலோ - பால:19 43/3

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *