சொல் பொருள்

(வி) 1. தாழ்வடை, நிலைகுலை, 2. வருந்து,  3. வருத்து,

சொல் பொருள் விளக்கம்

தாழ்வடை, நிலைகுலை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

deteriorate, worsen, suffer, be in distress, afflict, distress

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய
நொந்து_நொந்து உயவும் உள்ளமொடு
வந்தனெம் மடந்தை நின் ஏர் தர விரைந்தே – ஐங் 491/1-3

கார்கால மேகங்கள் முழங்குகின்ற பொழுதில், நான் இடையறவின்றி நலிந்துகொண்டிருக்க,
நொந்து நொந்து வருந்தும் உள்ளத்தோடு,
வந்துவிட்டேன் மடந்தையே! உன் அழகு என்னை இழுத்துவர, விரைவாக.

காதலர் பிரிந்தோர் கையற நலியும்
தண் பனி வடந்தை அச்சிரம் – ஐங் 223/3,4

காதலரைப் பிரிந்தவர்கள் செயலற்று வாடிவருந்தும்
குளிர்ந்த பனியோடே சேர்ந்த வாடையுடன் கூடிய முன்பனிக்காலத்தை

மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன்
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 7,8

(தம்)உடம்பில் கொண்ட மிகுந்த குளிர்ச்சி வருத்துகையினால், பலரும் கூடிக்
கையில் பிடித்த கொள்ளிக்கட்டையராய், கன்னங்களின் உட்புறம்(பற்கள்) அடித்துக்கொண்டு நடுங்க

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.