சொல் பொருள்
நல்லது – கோயிலில் நிகழும் பொங்கல் விழா தேர்த்திருவிழா முதலிய விழாக்கள்.
நளியது – கோயிலில் நிகழும் குளுமை சொரிதல் விழா.
சொல் பொருள் விளக்கம்
நன்மையாவது மங்கலம்; மங்கல விழாக்கள் நல்லது எனப்படும். வெப்பம் மிக்கும், மழையில்லாதும், அம்மை முதலிய நோய் வந்தும் துன்புறுத்தும் காலத்தில் தெய்வத்திற்குச் சாந்தி செய்ய வேண்டும் எனக் குளுமை சொரிதல் என ஒரு விழாக் கொண்டாடப்படும். குளுமை சொரிதல் விழாவே நளியது ஆகும். நளி என்பது குளிர்ச்சியாம். குளிர் நளுக்குதல் என்பது நடுக்குதல் பொருளில் வந்தது, குளிர் நடுக்குவதாகலின்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்