சொல் பொருள்
நாடியைப் பிடித்தல் – கெஞ்சல்
சொல் பொருள் விளக்கம்
உதவிவேண்டியோ, செய்த தவற்றைப் பொறுக்க வேண்டியோ காலைப் பிடித்தல் போல நாடியைப் பிடிப்பதும் வழக்கே. காலைப் பிடித்தல் முற்றாக நீரே தஞ்சம் என்னும் பொருட்டது. இந்நாடியைப் பிடித்தல் கெஞ்சிக் கேட்டல் வழிப்பட்டது. நாடியைப் பிடித்தல் உரிமைப்பட்டவர் செய்கை. காலைப்பிடித்தல் அவ்வுரிமை கருதாத பொதுமைத் தன்மையுடையது. “நாடியைப் பிடிக்கிறேன்; நான் கேட்டதை இல்லை என்று சொல்லிவிடாதே” என்பது வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்