சொல் பொருள்
நாய்ப்பிழைப்பு – இழிவு, ஓயாதலைதல்
சொல் பொருள் விளக்கம்
நாய் நன்றியறிவு மிக்கதாம் உயர்வுடையதாக மதிக்கப்படுகிறது. ஆனால் நன்றி மறக்க வல்லது நாயே. சுவையான ஒன்றை அதற்குத் தந்துவிட்டால் திருடனுக்கும் உதவும்படியாக இருந்துவிடுவதும் அதற்கு வழக்கமே. அதனால்தான் “நாய்க்குகன் என்றெனை ஓதாரோ” என நன்றி மறப்புச் சான்றாக நாயைக் குகன் வழியே கம்பர் குறித்தார்.
மற்றும், நாய் எத்துணைப் பொருள் கிடைப்பினும் இழிபொருள் எச்சில் இலை தேடலை விடுதல் இல்லை; வேலையின்றி ஓயாதலை தலை ஒழிதலில்லை; தன்னினத்தைக் கண்டால் காரணம் இல்லாமலே குரைத்தல் கடித்துக் குதறுதல், உண்டதைக் கக்கி அதனைப் பின் உண்டல் ஆகியவற்றைச் செய்யாமல் இருப்பதில்லை. ஆகலின், இவற்றைக் குறித்தே இழிவுப்பொருள் ஏற்பட்டதாம். அதனால், ‘இது என்ன நாய்ப் பிழைப்பு’ என வழக்கு மொழி உண்டாயிற்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்