Skip to content
நாவல்

நாவல் என்பதுஒரு மரமாகும்.

1. சொல் பொருள்

(பெ) ஒரு மரம்,அதன் கனி,

2. சொல் பொருள் விளக்கம்

நாவல் மரம் பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம். அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் ஆகிய பெயர்களில் நாவல் பழம் அறியப்படுகிறது. இதில் கருநாவல், கொடி நாவல், சம்பு நாவல் என வகைகள் உள்ளன.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Jaumoon-plum, Eugenia jambolana, Syzygium Jambulanum

நாவல்
நாவல்

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல் – மலை 135

காற்றால் உதிர்ந்தன, கரிய கனிகளான நாவல்பழங்கள்

நாவல் கீழ் பெற்ற கனி - பழ:138/4

நாவலம்தீவு ஆள்வாரே நன்கு - ஏலாதி:56/4

நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க - பெரும் 465

காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல்/மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை - மலை 135,136

புன் கால் நாவல் பொதி புற இரும் கனி - நற் 35/2

நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை - பரி 5/8

அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த - அகம் 380/4

கரும் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும் - புறம் 177/11

நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை - திரு 18

தீம் கனி நாவல் ஓங்கும் சேண் உயர் குன்றின் செம்பொன் - கிட்:10 29/1

நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில் - யுத்3:24 48/3

நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள் - மணி:2/1

தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவிடை - மணி:9/17

தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவினுக்கு - மணி:15/20

இரு கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி - மணி:17/30

நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்கு உற - மணி:22/29

நாவல் அம் தீவில் இ நங்கையை ஒப்பார் - மணி:25/12

நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் - மணி:28/180

சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது - மணி:17/37

நாவலொடு பெயரிய மா பெரும் தீவத்து - மணி:11/107

நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி - புகார்:3/117

நாவல் அம் தண் பொழில் மன்னர் - மது:17/3

நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஒற்று நம் - வஞ்சி:25/173

நல் வயிர பொன் தோட்டு நாவல் அம் பொன் இழை சேர் - வஞ்சி:29/104

நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஒற்று நம் - வஞ்சி:25/173

நல் நிலை உலகினுள் நாவல் போலவும் - இலாவாண:3/91

நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஓட்டிய - இலாவாண:18/76

நாவல்_அம்_தண்_பொழில் நலத்தொடு தோன்றி - நரவாண:3/183

நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஓட்டிய - இலாவாண:18/76

நாவல்_அம்_தண்_பொழில் நலத்தொடு தோன்றி - நரவாண:3/183

காய் கதிர் நீல மணி என நாவல் கரும் கனி சிதறுவ ஒரு-பால் - சீறா:1005/2

நிலங்கள் ஏழுக்கு நாவலம்தீவு கண் நிகர்க்கும் - சீறா:77/1

ஏழிசை தமிழில் பயனுற்ற வெண் நாவல் உற்று அடியில் பயில் உத்தம - திருப்:357/15

நாவல் அரசு மனை வஞ்சி தந்து அருள் பெருமாளே - திருப்:359/16

மகிழ் மாலதி நாவல் பலா கமுகு உடன் ஆட நிலா மயில் கோகில - திருப்:721/13

பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் என பேசுகின்றாயே - நாலாயி:1936/4

நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான் - 1.திருமலை:5 37/2

சென்றார் வெகுண்டார் சிரித்தார் திரு நாவல் ஊரர் - 1.திருமலை:5 38/3

வேலை இல் நாவல் ஊரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று - 1.திருமலை:5 43/3

அரு_மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை - 1.திருமலை:5 59/1

பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும் - 1.திருமலை:5 98/3

விண்ணவர் போற்றி செய் ஆனைக்காவில் வெண் நாவல் மேவிய மெய்ப்பொருளை - 6.வம்பறா:1 345/1

நாரணன் நான்_முகன் காணா உண்மை வெண் நாவல் உண்மை மயேந்திரமும் - 6.வம்பறா:1 346/1

அ பூம் கானில் வெண் நாவல் அதன் கீழ் முன் நாள் அரி தேடும் - 12.மன்னிய:4 2/1

ஞான சார்வாம் வெண் நாவல் உடனே கூட நலம் சிறக்க - 12.மன்னிய:4 13/3

வெண் நாவல் பலகையில் இட்டு மேற்கே நோக்கி - திருமந்:1002/3

வாய் வண்டு அனையது ஓர் நாவல் கனி நனி நல்க கண்டு - திருக்கோ:84/3

நாவல் தழீஇய இ நானிலம் துஞ்சும் நயந்த இன்ப - திருக்கோ:191/2

விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய் - தேவா-சம்:1711/3

வேல் ஆடு கையாய் எம் வெண் நாவல் உளாய் - தேவா-சம்:1712/3

வெம் கண் விடையாய் எம் வெண் நாவல் உளாய் - தேவா-சம்:1714/3

விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய் - தேவா-சம்:1716/3

மெய் தேவர் வணங்கும் வெண் நாவல் உளாய் - தேவா-சம்:1718/3

வெண் நாவல் அமர்ந்து உறை வேதியனை - தேவா-சம்:1719/1

வெண் நாவல் விரும்பு மயேந்திரரும் - தேவா-சம்:3967/2

வெண் நாவல் விரும்பு மயேந்திரரும் - தேவா-சம்:3973/2

அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன் - தேவா-அப்:631/1

வாயினால் கூறி மனத்தினால் நினைவான் வள வயல் நாவல் ஆரூரன் - தேவா-சுந்:145/3

சீரும் சிவகதியாய் இருந்தானை திரு நாவல் ஆரூரன் - தேவா-சுந்:198/2

மறையார்-தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன - தேவா-சுந்:258/3

ஆரா இன்னமுதை அணி நாவல் ஆரூரன் சொன்ன - தேவா-சுந்:268/2

உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார் - தேவா-சுந்:414/3

அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அரும் தமிழ்கள் இவை வல்லார் அமர்_உலகு ஆள்பவரே - தேவா-சுந்:477/4

அடியார்அடியன் நாவல் ஊரன் உரைத்தன - தேவா-சுந்:517/2

நாடி நாவல் ஆரூரன்நம்பி சொன்ன நல் தமிழ்கள் - தேவா-சுந்:549/3

கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானை குளிர் பொழில் திரு நாவல் ஆரூரன் - தேவா-சுந்:634/3

பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் - தேவா-சுந்:644/2

வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் - தேவா-சுந்:687/2

திரை தரு புனல் சூழ் திரு முல்லைவாயில் செல்வனை நாவல் ஆரூரன் - தேவா-சுந்:708/2

மந்த முழவம் இயம்பும் வள வயல் நாவல் ஆரூரன் - தேவா-சுந்:750/3

பொன் அலங்கல் நல் மாட பொழில் அணி நாவல் ஆரூரன் - தேவா-சுந்:780/3

வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன் சொன்ன - தேவா-சுந்:1016/3
நாவல்
நாவல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *