Skip to content

சொல் பொருள்

(வி) 1. நிறை, முழுமையடை, 2. முடிவுறு, 3. நன்கு வளர்ச்சியடை, 4. மிகுந்திரு,

2. (பெ). நிரம்புதல், முழுதும் பொருந்துதல்

சொல் பொருள் விளக்கம்

நிறை, முழுமையடை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

become full, complete, end, terminate, become fully grown, be copius, abundant, being full

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் – புறம் 191/3

என்னுடைய மாண்புமிக்க மனைவியுடனே புதல்வரும் அறிவு நிறையப்பெற்றிருக்கின்றனர் ஒலிக்க (வெளியே)வந்து

நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – நற் 99/1

ஈரப்பசை இல்லாமல் முற்றிலும் வறண்டுபோன முடிவே இல்லாத நீண்ட வெளியில்

அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன்
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெரும் செம்மலனே – குறு 33/1-4

தோழியே! இந்தப் பாணன் ஓர் இளம் மாணாக்கன் போல் இருக்கிறான்.
தன் ஊர் மன்றத்தில் எப்படி இருப்பானோ?
இரந்து உண்ணும் உணவினையுடைய நன்கு வளர்ச்சி பெறாத மேனியோடு
இந்தப் புது ஊரிலும் பெரும் சிறப்புடையவனாயிருக்கிறான்.

ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – மலை 284

தீமைகள் மிகுந்த பாதையில் அவர் முன்னேசெல்ல

நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி
நிறைந்து நெடிது இரா தசும்பின் வயிரியர்
உண்டு என தவாஅ கள்ளின்
வண் கை வேந்தே – பதி 43/33-36

முழுதும் பொருந்துதலும், இடைவெளி மிக விடுதலும் இல்லாத, கோக்காலியின் மேல்
வைக்கப்பட்டுள்ள
நீண்ட நேரம் நிறைந்து இருப்பதை அறியாத குடங்களிலிருக்கும், கூத்தரும் பாடகரும்
உண்டபோதும் குறையாத, கள்ளினையுடைய
வளமையான கொடையினையுடைய வேந்தனே! (பார்க்க: ஔவை – உரை விளக்கம்)

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *