சொல் பொருள்
(வி) 1. நிலைநிறுத்து, 2. ஆற்றியிரு, 3. அறுதிசெய், தீர்மானி, 4. படை, உருவாக்கு, 5. நிறுத்து, போட்டியிடச்செய், 6. வை, 7. முழக்கு, (வாச்சியங்களை) வாசிக்கச்செய்,
சொல் பொருள் விளக்கம்
நிலைநிறுத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
establish, be preserved with patience, decide, determine, create, construct, field (as a candidate), place, put, play (the musical instrument)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர – கலி 129/5,6 பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் நீ நல்கின் உண்டு என் உயிர் – கலி 94/11,12 பொறுக்க முடியாத காம நோயை ஏற்படுத்தினாய்! நான் பொறுத்துக்கொண்டு ஆற்றியிருக்கமாட்டேன், நீ இரக்கப்பட்டால் என் உயிர் என்னிடத்தில் உண்டு” நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் – கலி 33/29,30 தாம் குறித்த நாளின் எல்லையை அறுதிசெய்து, தாம் சொல்லியது பொய்யாகிப்போகாமல் மாலை தொங்கும் அகன்ற மார்பினையுடைய அவர் விரைந்து வருகிறார் இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர் ஏதில் குறு நரி பட்டு அற்றால் – கலி 65/24,25 பெரிய புலியைப் பிடிப்பதற்கு உண்டாக்கிய வலையினில், ஒரு ஒன்றிற்கும் உதவாத குள்ள நரி மாட்டிக்கொண்டதைப் போல் நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே ஆர்வு_உற்று எமர் கொடை நேர்ந்தார் – கலி 104/73-75 “அழகிய அணிகளை அணிந்தவளே! யாராலும் அணைக்கமுடியாது என்று நிறுத்தப்பட்ட கொலைகாரக் காளையான காரியின் சீற்றத்துக்கு அஞ்சாதவனாய்ப் பாய்ந்து அதை அடக்கிய அந்த இளைஞனுக்கே மகிழ்ச்சியுடன் எம் வீட்டார் உன்னைக் கொடுப்பது என்று முடிவுசெய்தார், வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ் பசும் குடை – அகம் 37/10 வெயிலில் குப்புற வைத்த மிக்க இதழ்களையுடைய பசிய (பனையோலைக்)குடையில் இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க உருவ பல் பூ தூஉய் வெருவர குருதி செம் தினை பரப்பி குறமகள் முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் – திரு 240-244 முழங்குகின்ற ஓசையினையுடைய அருவியோடு இனிய இசைக்கருவிகளும் ஒலிக்க, சிவந்த நிறத்தையுடைய பல பூக்களையும் தூவி, அச்சம் வரும்படி குருதி அளைந்த சிவந்த தினையினையும் பரப்பி, குறமகள் முருகன் உவக்கும் வாச்சியங்களை வாசிக்கச்செய்து, முரண்பட்டோர் அஞ்சும்படியாக, முருகக்கடவுள் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகன்ற நகரின்கண்ணே – வெ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்