சொல் பொருள்
நிலம் – நன்செய்
நீச்சு – நீர்வாய்ப்பு.
சொல் பொருள் விளக்கம்
‘நிலம் நீச்சு உண்டா?’ என்பது உழவரைப் பற்றிய ஒரு வினா. நிலம் நன்செய் ஆதல் ‘நிலபுலம்’ என்பதில் காண்க. நீச்சு என்பது கிணறு, குளம், கால் முதலிய வாய்ப்புகளைக் குறிக்கும். “நீரருகே சேர்ந்த நிலம்” என்பதே நிலத்தின் மதிப்பாம். நீர் வளமில்லா நிலம், நிலம் எனப்படாமல் புலமாகப் போய்விடும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்