சொல் பொருள்
நீக்கு – மறக்க வேண்டுவனவற்றை மறத்தல்.
போக்கு – ஒதுக்க வேண்டுவனவற்றை ஒதுக்குதல்
சொல் பொருள் விளக்கம்
ஒரே கெடுபிடியாக இருந்தால் முடியுமா வாழ்க்கையில் நீக்குப் போக்கு கட்டாயம் வேண்டும் என்று பட்டறிவாளர் அறிவுரை கூறுவர். “ மறத்தல் இறப்பினை (சிறப்பு) என்றும்” என்பார் வள்ளுவர். “தூற்றாதே தூர விடல்” என்பது நாலடி. இவை நீக்குப் போக்குகளைச் சுட்டுவன.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்