சொல் பொருள்
(வி) 1. நீளு, அதிகரி, 2. நீட்டு, 3. மிகு, பெருகு,
2. (பெ.அ) 1. நிலைத்திருக்கிற, 2. நெடிய, நீளமான,
3. (பெ) 1. நெடுங்காலம், 2. நீட்டித்தல்,
சொல் பொருள் விளக்கம்
1. (வி) 1. நீளு, அதிகரி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
grow long, extend, abound, lasting long, long, long time, extending
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாராது அவண் உறை நீடின் நேர் வளை இணை_ஈர்_ஓதி நீ அழ துணை நனி இழக்குவென் – ஐங் 269/3-5 திரும்பி வராமல் அங்கேயே தங்கியிருப்பது நீண்டுசென்றால், செம்மையான வளைகளை அணிந்த இரு பிரிவுகளையுடைய வழவழப்பான கூந்தலையுடையவளே! நீ அழும்படி உனக்குத் துணையாக இருப்பதை மிகவும் நான் இழப்பேன் நீடினம் என்று கொடுமை தூற்றி – ஐங் 478/1 பிரிவுக்காலத்தை நீட்டித்துக்கொண்டே செல்கிறேன் என்பதைக் கொடும் செயலாகத் தூற்றி விசும்பு கண் அழிய வேனில் நீடி கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் – அகம் 189/2,3 மேகம் வானிடத்திலிருந்து ஒழிதலினால் வேனில் வெப்பம் மிக குளங்கள் தம்மிடத்தே நீர் அற்றிருக்கும் கற்கள் உயர்ந்த இடங்களில் நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று எழுமதி வாழி ஏழின் கிழவ – பொரு 62,63 நீடித்த நாட்களாய் இருக்கும் பசி (உன்னை)விட்டு நீங்குதலை விரும்பினால், கால நீட்டித்தல் இன்றி எழுவாயாக, நீ வாழ்வாயாக, (நரம்பு)ஏழின் கண்ணும் உரிமை உடையோய், நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 195 நெடிய மூங்கிலில் இருந்து முற்றின தேனால் செய்த கள்தெளிவை ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே – புறம் 359/18 இவ்வுலகில் நெடுங்காலம் நிலைநிற்கும் உன் ஈகையால் எய்திய புகழ் நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று எழுமதி வாழி ஏழின் கிழவ – பொரு 62,63 நீடித்த நாட்களாய் இருக்கும் பசி (உன்னை)விட்டு நீங்குதலை விரும்பினால், கால நீட்டித்தல் இன்றி எழுவாயாக, நீ வாழ்வாயாக, (நரம்பு)ஏழின் கண்ணும் உரிமை உடையோய்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்