Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தன்மையைக் கொண்டுள்ளது/கொண்டுள்ளவர்/கொண்டுள்ளவள், 2. நீரிலுள்ளது / நீரைக்கொண்டது,

சொல் பொருள் விளக்கம்

தன்மையைக் கொண்டுள்ளது/கொண்டுள்ளவர்/கொண்டுள்ளவள்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

that which has the property or nature

that which is in water, which has water

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்
 பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு – மது 504,505

மலையிடத்தனவும், நிலத்திடத்தனவும், நீரிடத்தனவும் பிற இடத்தனவுமாகிய
பல் வேறான அழகிய மணிகளையும், முத்துக்களையும், பொன்னையும் வாங்கிக்கொண்டு

அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி
பகலும் வருதி பல் பூ கானல்
இ நீர ஆகலோ இனிதால் – நற் 223/2-4

அன்பு பெரிதாக உடைமையினாலே இவளுக்குக் கருணைகாட்டல் வேண்டி
பகலிலும் வருகிறாய்; பலவான பூக்களைக் கொண்ட இந்தக் கடற்கரைச் சோலையில்
இத்தன்மையராக இருத்தல் இனிதே

நறும் தண் நீரள் ஆர் அணங்கினளே – குறு 70/2

நறிய மணமும் குளிர்ச்சியும் உடைய தன்மையள்; நிறைந்த வருத்தத்தைச் செய்பவள்;

நீர
நீல பைம் போது உளரி – குறு 110/2,3

நீரிலுள்ள
நீலக்குவளையின் இளம் மொட்டைத் தடவிக்கொடுத்து

மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப – கலி 35/5

மலர்கள் நிறைந்த பூஞ்சோலையை அடுத்துப் பளிங்கு போன்ற நீரைக்கொண்ட குளங்கள் நிறைந்திருக்க,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *