Skip to content

சொல் பொருள்

(பெ) 1. புழுதி, 2. சாம்பல், 3. துகள், பொடி,

சொல் பொருள் விளக்கம்

புழுதி, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

dust, ashes, powder

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201

புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும்

மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து – கலி 1/8

மிக்குச் செல்கிற போர்கள் பலவற்றையும் வென்று, அதன் வலிமையால் பகைவர் வெந்த சாம்பலை அணிந்து

அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 97/10

அந்த யானைதான் சுண்ணப்பொடி பூசி நறுமணமிக்க மதுநீர் உண்டு,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *