Skip to content
நூபுரம்

நூபுரம் என்பதன் பொருள் சிலம்பு, கிண்கிணி, பாதகிண்கிணி

1. சொல் பொருள் விளக்கம்

சிலம்பு, கிண்கிணி, பாதகிண்கிணி, இசைநூபுரம் – வீரனணியுங்கழல். நூபுரம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து ஆறாவது கரணமாகும்(36. தண்டையாட்டு – நூபுரம்). கைகளை இருமருங்கும் நீட்டி, ஒரு காலை மற்றொரு காற்சிலம்பின் மேல் வைத்து நடிப்பது நூபுரமாகும்.

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

tinkling anklet

Anklets formed of little bells

foot-rings formed of little bells

tinkling ankle-rings

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி- கலி 83/16

தமது திருத்தமான காலடிகளில் சிலம்புகள் ஆரவாரிக்க, ஓடிவந்து

பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை - சிலப்.புகார் 6/84

ஆடுவார் பொருவி னூபுரத்தை (கம்பரா.நகர.56).

தாது மாமலர் முடியா லேபத
றாத நூபுர அடியா லேகர
தாள மாகிய நொடியா லேமடி ...... பிடியாலே

தாது மா மலர் முடியாலே பதறாத நூபுர அடியாலே கர
தாளமாகிய நொடியாலே மடி பிடியாலே ... மகரந்தப் பொடிகள்
தங்கும் பூக்கள் உள்ள கூந்தலாலும், பதறாமல் நடக்கும் சிலம்புகள்
அணிந்த பாதத்தாலும், கைக்கொண்டு இடுகின்ற தாள ஒலியாலும்,
(வருபவர்களின்) மடியைப் பிடித்துத் தம் வசப்படுத்துவதாலும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *