Skip to content

சொல் பொருள்

(பஞ்சை) இழையாக்கு, பஞ்சு இழை, பூணூல், ஆகமங்கள், சாத்திரங்கள், இசை, கட்டிடக்கலை ஆகியன பற்றிய புத்தகங்கள், 

நேர்

சொல் பொருள் விளக்கம்

நூல் என்பது பஞ்சு நூல், படிப்பு நூல் என்பவை அன்றிப் பல்வேறு பொருள்களில் இடம் பெறலுண்டு. அவற்றுள் ஒன்று நேர் என்பது. மரத்தை அறுப்பதற்கோ, கல்லை உடைப் பதற்கோ, மனையிடம் வகுப்பதற்கோ நூலடிப்பது வழக்கம். நேராக்க உதவுவது அது. அதன் நேராக்கும் கருத்துப் பொருள் கொண்டு நூல் என்பதற்கு யாழ்ப்பாணத்தார் நேர் என்னும் பொருள் கூறுகின்றனர்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

make yarn from cotton, spin, yarn, thread, sacred thread, agama, Systematic treatise, treatise on music, architecture etc.,

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்று அன்ன
வயலை – ஐங் 211/1,2

நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப – குறு 104/2

நூலினின்றும் அறுபட்ட முத்துக்களைப் போல குளிர்ந்த துளிகள் உதிர

புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப – பரி 11/79

முப்புரியாக பூணுலை அணிந்த அந்தணர் பொன்னாலான கலன்களை ஏந்தி நிற்க

மாலை மார்ப நூல் அறி புலவ – திரு 261

மாலை அணிந்த மார்பினனே, வேதாகமங்கள் முதலிய பல சாத்திரங்களையும் ஓதாது உணர்த்தும் பண்டிதனே

கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக
நூல் நெறி மரபின் பண்ணி – சிறு 230,231

சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை, (பாலை யாழின்)குரலையே(செம்பாலையை) குரலாகக் கொண்டு
இசைநூல் கூறுகின்ற முறையால் இயக்கி

நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி – நெடு 76,77

(கட்டிடக்கலை)நூலை அறிந்த கலைஞர் மிகச்சரியாக நூலை நேரே பிடித்து,
திசைகளைக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை (ஏறிட்டுப்)பார்த்து(த் தொழுது),

நூல் அமை பிறப்பின் நீல உத்தி – அகம் 400/5

புரவி நூல் கூறும் இலக்கணம் அமைந்த பிறப்பினையும், நீலமணியாகிய நெற்றிச்சுட்டியினையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *