சொல் பொருள்
சிறுவாயில், துவாரம்,
சொல் பொருள் விளக்கம்
சிறுவாயில், துவாரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Postern, hole
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின் செய்ம்ம் மேவல் சிறு கண் பன்றி ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி நூழை நுழையும் பொழுதில் – நற் 98/1-4 முள்ளம்பன்றியின் முள்ளைப்போன்ற பருத்த மயிருள்ள பிடரியைக் கொண்ட, வயலில் மேயும் விருப்பமுள்ள, சிறிய கண்கள் உள்ள, பன்றியானது, உயர்ந்த மலையிலுள்ள அகன்ற கொல்லையில் சென்று மேயும்பொருட்டு, விலங்குகளைப் பிடிக்கும் பெரிய பொறியின் சிறிய வாசலில் நுழையும் பொழுதில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்