Skip to content

சொல் பொருள்

திருமால், நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் மன்னன், சிவபெருமான், முருகன், உயர்ந்தோன், இந்திரன்

சொல் பொருள் விளக்கம்

திருமால்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Lord Vishnu, a Pandiya king, Lord Siva, Lord Muruga, great person, Lord Indra

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் – பெரும் 402

நீல நிறத்தையுடைய வடிவினையுடைய திருமாலின் உந்தி

பொலம் தார் மார்பின் நெடியோன் உம்பல் – மது 61

பொன்னால் செய்த மாலையை அணிந்த நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் புகழால் நீண்டவனுடைய
வழியில் வந்தவனே

மழு வாள் நெடியோன் தலைவன் ஆக – மது 455

மழுவாகிய வாளையுடைய பெரியோனாகிய சிவபெருமான் தலைவனாய் இருக்க

ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து – அகம் 149/16

இடையறாத விழாக்களையுடைய முருகனது திருப்பரங்குன்றத்தே

தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே – புறம் 114/6

தேர் வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோனுடைய மலை.

வச்சிர தட கை நெடியோன் கோயிலுள் – புறம் 241/3

வச்சிராயுதத்தையுடைய விசாலமாகிய கையையுடைய இந்திரனது கோயிலினுள்ளே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *