சொல் பொருள்
நேரம் – ஒன்றைச் செய்தற்கு நேர்வாக அமைந்த பொழுது.
காலம் – ஒன்றைச் செய்தற்கு எடுத்துக் கொள்ளும் கால நிலை.
சொல் பொருள் விளக்கம்
எந்தச் செயலையும் காலநிலை அறிந்து மேற்கொள்ளலும் வேண்டும், கால நிலையுடன் அதனை நிறைவேற்றுதற்குரிய நேரத்தையும் போற்றிச் செய்தலும் வேண்டும். ‘காலமறிந்து செயல்’ எனனும் திருக்குறள் சொகினம் (சகுனம்) ஐந்திரம் (பஞ்சாங்கம்) பார்த்துச் செய்வதைக் குறிப்பதன்றாம். அவ்வகையில் நேரமும் காலமும் கொள்க. ஒரு செயல் நிறைவேறத்தக்க பொழுது நிறைவேற இயலாத பொழுதென உண்டேயன்றிப் பொழுதில் நல்பொழுது அல்பொழுது இல்லையாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்