சொல் பொருள்
இரங்கு, வருந்து, இற்றுப்போ
சொல் பொருள் விளக்கம்
இரங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pity, be compassionate, be distressed, become threadbare
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல்காமையின் நைவர சாஅய் – புறம் 146/6 நீ அருளாமையால் கண்டார் இரங்க மெலிந்து ஐவாய்அரவின் இடைப்பட்டு நைவாரா மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை – கலி 62/13,14 ஐந்து வாய்களைக் கொண்ட பாம்பின் பார்வையில் அகப்பட்டு வருந்தி, மாசற்ற திங்கள் போன்று விளங்கும் முகத்தையுடையவரை அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து நைவாரா ஆய_மகள் தோள் – கலி 103/65-67 “அஞ்சாதவராய்க் கொலைத்தொழிலையுடைய காளையை அடக்குபவரை அன்றி உள்ளத்தில் உரம் இல்லாதவர்கள் அணைத்துக்கொள்வதற்கு அரியது, உயிரைத் துறந்து நைந்துபோகும் நிலையிலிருந்தாலும், ஆயர் மகளிரின் தோள்கள்” என்றும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்