Skip to content

சொல் பொருள்

விலை, விற்பனை, பண்டமாற்றுப்பொருள்

சொல் பொருள் விளக்கம்

பண்டமாற்றுப்பொருள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

price, sale, item of exchange

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி – பெரும் 141

விடியற்காலத்து (அவர்கள்)பசுக்களைப் பற்றிக் கொணர்ந்து, (அவற்றைக்)கள்ளுக்கு விலையாகப் போக்கி

நறவு நொடை கொடியொடு
பிறபிறவும் நனி விரைஇ – பட் 180,181

கள் விற்பனைக்காகக் கட்டிய கொடியுடன், 180
ஏனையவற்றிற்குக் கட்டின கொடிகளும் மிகவும் கலந்துகிடப்பதால்

உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் – நற் 254/6

உப்பு விற்பவர்கள் கொண்டுவந்த உப்புக்கு மாற்றான நெல்லை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *