சொல் பொருள்
கண்கள், பார்வை, முகத்தோற்றம், தோற்றம்
சொல் பொருள் விளக்கம்
கண்கள், பார்வை, முகத்தோற்றம், தோற்றம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
eyes, sight, look, countenance, expression
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிணி நெகிழ பைம் துகில் நோக்கம் சிவப்பு ஊர பூ கொடி போல நுடங்குவாள் – பரி 21/58,59 அழகிய ஆடையின் இறுக்கம் நெகிழ, கண்களில் சிவப்பு ஊர, பூங்கொடியைப் போல வளைந்து ஆடுவாள் மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று – குறி 25 மான் போல் அமர்ந்த பார்வை(கொண்ட கண்கள்)கண்ணீர் மல்கி, ஒன்றும் செய்ய இயலாமல் அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு தூ துளி பொழிந்த பொய்யா வானின் வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும் – மலை 74-76 தன் ஆட்சி முழுதையும் கொடுத்தாலும் மனநிறைவடையாத தோற்றத்துடன், தூய்மையான துளிகளை மிகுதியாகப் பெய்கின்ற பருவம் தவறாத வானத்தைப் போன்று, நிற்காமல் கொடுக்கும் அவனது நாளோலக்கத்தையும் (முற்பகல் நேர அரசு வீற்றிருப்பு),
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்