Skip to content

சொல் பொருள்

துன்புறு, வருந்து, நொந்துபோ, வேதனைப்படு

சொல் பொருள் விளக்கம்

துன்புறு, வருந்து, நொந்துபோ, வேதனைப்படு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be grieved, be anguished, feel pain, pain struck

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நோ இனி வாழிய நெஞ்சே
———————— ————– ———
வலை மான் மழை கண் குறு_மகள்
சில் மொழி துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே – நற் 190

துன்புற்று நலிந்துபோவாய்! வாழ்க! நெஞ்சமே
———————- —————- ————
வலைப்பட்ட மானைப்போன்ற, குளிர்ச்சியான கண்களையுடைய சிறுமகளின்
சில சொற்களே பேசும் பவளம் போன்ற வாயினில் தோன்றும் சிரிப்பினால் மகிழ்ந்துபோன நீ! 

நோ தக்கன்றே காமம் யாவதும்
நன்று என உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே – குறு 78/4-6

வருந்தத்தக்கது காமம், ஒருசிறிதும்
நன்று என உணராதவரிடத்தும்
வலிந்து சென்று நிற்கும் பெரும் மடமையை உடையது.

நோகோ யானே நோம் என் நெஞ்சே – நற் 312/1

நொந்துபோயிருக்கின்றேன் நான்! என்னை நொந்துகொள்ளும் என் நெஞ்சமே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *