சொல் பொருள்
(பெ) 1. இளமை, 2. பொன்னிறம், 3. காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் ஏற்படும் நிறமாற்றம்
சொல் பொருள் விளக்கம்
1. இளமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
infancy, golden colour, sallowness or paleness of complexion in lady’s body or body parts due to
love-sickness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின் – முல் 12 சிறிய கயிறினாலே கட்டப்பட்ட பச்சிளங்கன்றின் பசலை நிலவின் பனி படு விடியல் – புறம் 392/3 இளம் நிலவு திகழும் பனி சொரியும் விடியற்காலத்தே பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ – புறம் 155/4 பாழூரின்கண் நெருஞ்சியினது பொன்னிறத்தையுடைய வாலிய பூ ஊர் உண் கேணி உண்துறை தொக்க பாசி அற்றே பசலை காதலர் தொடு_உழி தொடு_உழி நீங்கி விடு_உழி விடு_உழி பரத்தலானே – குறு 399 ஊரினர் உண்ணும் சிறிய குளத்தில் உண்ணும் துறையில் கூடிய பாசியைப் போன்றது பசலைநோய்; காதலர் தொடும்பொழுதெல்லாம் நீங்கி, அவர் விடும்பொழுதெல்லாம் மீண்டும் பரந்துவிடுகிறது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்