Skip to content

சொல் பொருள்

(பெ) காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் நிறம் மாறுபடுதல்,

சொல் பொருள் விளக்கம்

காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் நிறம் மாறுபடுதல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

turning sallow or pale due to love-sickness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேய் நலம் இழந்த தோள் விளங்கு இழை பொறை ஆற்றாள்
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/16,17

மூங்கில் போன்ற அழகை இழந்த தோள்கள், தம் ஒளிவீசும் அணிகலன்களைத் தாங்கமாட்டாமல் தளர,
பளிச்சென்ற நெற்றியில் பசலை படர இவளை நீ துறந்து சென்றாய்?

பிரிவுத்துன்பத்தால் பெண்களுக்கு இவ்வாறு ஏற்படும் நிறமாற்றம் சிறிது சிறிதாக நடைபெறுவதைப்
பசப்பு ஊர்தல், பசப்பு இவர்தல் எனப் புலவர்கள் பாடியுள்ளனர்.

பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே – நற் 197/2

சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர – நற் 358/2

நுதல் பசப்பு இவர்ந்து திதலை வாடி – குறு 185/1

கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும் – குறு 371/1

மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே – கலி 7/8

பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த_கால் – கலி 15/17

நிறன் ஓடி பசப்பு ஊர்தல் உண்டு என – கலி 16/21

நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ – கலி 28/15

போர்ப்பது போலும் பசப்பு – கலி 33/15

பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை – கலி 99/10

பழி தபு வாள் முகம் பசப்பு ஊர காணும்_கால் – கலி 100/18

பொதுவாகப் பெண்களின் மேனியில் ஏற்படும் நிறமாற்றம், குறிப்பாக, அவர்களுடைய கண்களிலும்,
நெற்றியிலும் படரும் எனவும் புலவர்கள் பாடியுள்ளனர்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *