Skip to content

சொல் பொருள்

(வி) 1. பசலை நிறம்பெறு, காதல் நோயினால் நிறம் மாறு, 2. ஒளி மங்கு, 3. பொன்னிறம் பெறு

சொல் பொருள் விளக்கம்

1. பசலை நிறம்பெறு, காதல் நோயினால் நிறம் மாறு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

turn sallow or pale due to love-sickness, lose lustre, become golden

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கடுங்கண் யானை கானம் நீந்தி
இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி
பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்ன
நன் மா மேனி பசப்ப
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே – குறு 331/4–8

கடுமையான யானைகள் இருக்கும் பாலை நிலத்தைக் கடந்து
செல்வாரோ தோழி! வாழ்க! நறிய வடுவையும்
பசிய அடிமரத்தையும் உடைய மா மரத்தின் அழகிய தளிர் போன்ற
நல்ல மாமைநிறமுள்ள மேனியில் பசலை ஊர
நம்மைக்காட்டிலும் சிறந்த அரிய பொருளை ஈட்டுவதற்கு

அம்ம வாழி தோழி நம் ஊர்
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்
நிறத்தினும் நிழற்றுதல்-மன்னே
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங் 35

தோழியே கேட்பாயாக! நம் ஊரின்
பொய்கையில் பூத்த ஆம்பல் மலரின் நார் உரிக்கப்பெற்ற மெல்லிய தண்டின்
நிறத்தைக் காட்டிலும் ஒளியுடையதாக இருந்து,
இப்போது பசந்துபோயிற்று, என் மாநிற மேனியழகு.

அம்ம வாழி தோழி நம் ஊர்
பொய்கை பூத்த புழை கால் ஆம்பல்
தாது ஏர் வண்ணம் கொண்டன
ஏதிலாளற்கு பசந்த என் கண்ணே – ஐங் 34

தோழியே கேட்பாயாக! நம் ஊரின்
பொய்கையில் பூத்த உள்துளையுள்ள தண்டினையுடைய ஆம்பல் மலரின்
தாதுக்கள் போன்ற பொன் நிறத்தைக் கொண்டன,
நமக்கு அயலானாகிவிட்டவனுக்காகப் பசந்துபோன எனது கண்கள்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *