Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தவம், நோன்பு, விரதம், 2. வழிபடு தெய்வம்

சொல் பொருள் விளக்கம்

1. தவம், நோன்பு, விரதம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

penance, austerities, tutelary deity

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான் – முல் 37

(ஆடையைக்)காவிக்கல்லைத் தோய்த்து உடுத்திய, விரதங்களையுடைய அந்தணன்

பைம்_சேறு மெழுகிய படிவ நன் நகர் – பெரும் 298

பசிய சாணக் கரைசலால் மெழுகிய வழிபடும் தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களையும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.