Skip to content

படுத்துவிடுதல்

சொல் பொருள்

படுத்துவிடுதல் – செயலற்றுப் போதல்

சொல் பொருள் விளக்கம்

ஓடுதல், நடத்தல், இருத்தல், படுத்தல் என்பவை ஒன்றன் ஒன்று சுருங்கிய இயக்கமாம். நன்றாக ஓடுகிறது. சீராக நடக்கிறது; ஏதோ நடந்து கொண்டிருக்கிறது; தொழில் படுத்துவிட்டது என்பவை படிப்படி இறக்க நிலையாம். ‘படுத்தல்’ என்பது உறக்கப் பொருளது. “உறங்குவது போலும் சாக்காடு” என்பதுபோல் முழுதாகப்படுத்துவிடுவதும் உண்டு. செயலற்றுபோய் முற்றாக முடிந்துவிட்ட நிலையாம் அது.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.