படையெடுத்தல்

சொல் பொருள்

படையெடுத்தல் – கூட்டமாக வருதல்

சொல் பொருள் விளக்கம்

வீரர்கள் போருக்குச் செல்லல் படையெடுப்பாகும். ஆனால், படையெடுத்தல் என்பது போருக்குச் செல்லுதல் என்னும் பொருளின் நீங்கிக்கூட்டமாகப் போதல் என்னும் பொருளில் வழங்குவதுண்டு. “எறும்பு படையெடுத்துப் போகிறது; ஈ படையெடுத்துப் போகிறது” என்பவை கூட்டமாகப் போதலைக் குறிக்கும் படையெடுப்பு. குழந்தைகள் கூட்டமாக வருதலைக் “குழந்தைகள் படையெடுத்து எங்கே வருகின்றன” என்பதும் வழக்கே. படை திரண்டு வருதல் என்பதும் இதுவே.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.