சொல் பொருள்
பட்டம் – படிப்புத் திறமை தகுதி
பதவி – படிப்புத் திறமையால் அடையும் பணித் தகுதி.
சொல் பொருள் விளக்கம்
பட்டம்-துணி; துணியில் பொறித்துத் தரப்பட்ட சிறப்புத் தகுதி பட்டம் எனப்பட்டது. பின்னே படிப்புச் சான்றிதழாக வழங்குபவற்றுக்கு வளர்ந்தது.
பதவி-மேனிலை; உயர்வின் திரட்சிநிலை; அது அதிகாரம் செலுத்தும் பெருநிலையாய் அமைந்தது.
“பட்டம் பதவியிலிருந்தால் மதிப்பு தானே தேடி வரும்” என்பது வழக்குரை.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்