சொல் பொருள்
படுதல் – நெருங்குதல்
படாமை – நெருங்காமை
சொல் பொருள் விளக்கம்
நெருங்குவது போல் நெருங்கி, நெருங்காமல் வாழ்பவரைப் பட்டும் படாமல் வாழ்பவர் என்பர். தொட்டும் தொடாமல் வாழ்பவர் என்பதும் வழக்கு. தாமரை இலைமேல் பட்ட தண்ணிர் இயல்பு போல் வாழும் வாழ்க்கையை இவ்வாறு சுட்டுவர். பற்றற்ற வாழ்வு என்பது அதன் சுருக்கம். பட்டும் படாமல் பேசுவதைத் தப்பித்துக் கொள்ளும் சூழ்ச்சியம் என்று கூறுவர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்