Skip to content

சொல் பொருள்

(பெ) மோசமான ஒரு நிகழ்வால் ஒருவருக்கு ஏற்படும் பயமும் கலக்கமும் நடுக்கமும் கூடிய உணர்வு, பதற்றம்,

சொல் பொருள் விளக்கம்

மோசமான ஒரு நிகழ்வால் ஒருவருக்கு ஏற்படும் பயமும் கலக்கமும் நடுக்கமும் கூடிய உணர்வு, பதற்றம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

throbing through pain, fear or grief, being in anguish

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பரு கோட்டு யாழ் பக்கம் பாடலோடு ஆடல்
அருப்பம் அழிப்ப அழிந்த மன கோட்டையர்
ஒன்றோடு இரண்டா முன் தேறார் வென்றியின்
பல் சனம் நாணி பதைபதைப்பு – பரி 10/56-59

பெரிய தண்டினையுடைய யாழின் இசையும், பாடலுடன் ஆடலும்
ஊடியிருந்தவரின் மனவுறுதியை அழிக்க, இவ்வாறு மனம் என்னும் கோட்டை அழிந்துபோன மைந்தரும்,
மகளிரும், மனம் ஒன்றுபட்டு, முன்பு இரண்டாக விளங்கிய நிலைமை கெடத் துணியமாட்டார், ஊடலில்
வெல்லவேண்டும் என்ற எண்ணத்தில், அவர்கள் அங்குத் திரண்டிருந்த பலவகை மக்களால் வெட்கப்பட்டனர், மனம் பதைபதைத்தனர்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *