Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பந்தல்

2. முத்துக்களுக்கு பேர்போன ஒரு சங்ககால ஊர்,

சொல் பொருள் விளக்கம்

1. பந்தல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

shed with a flat roofcovered with plaited coconut leaves or other branches with leaves

a town in sangam period famous for its pearls.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர் – பெரும் 297

கொழுத்த கன்றைக் கட்டின சிறிய கால்களையுடைய பந்தல்

குரை இலை போகிய விரவு மணல் பந்தர் – நற் 40/2

ஒலிக்கும் தென்னங்கீற்று வேய்ந்து, பரப்பிய மணலைக் கொண்ட பந்தலில்,

பந்தர் பெயரிய பேர் இசை மூதூர் – பதி 67/2

பந்தல் என்ற பெயரைக் கொண்ட பெரிய புகழ்படைத்த முதிய ஊரைச் சேர்ந்த

பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம் – பதி 74/6

பந்தல் என்ற ஊர் தந்த பலரும் புகழும் முத்துக்களையும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *