சொல் பொருள்

(வி) விலங்கு/பறவை இனங்கள் ஒன்றையொன்று ஒலிக்குறிப்பால் அழை, (பெ) 1. நஞ்சை, புஞ்சை ஆகிய நிலங்களில் விளையும் தாவரம், 2. ஓசை

சொல் பொருள் விளக்கம்

விலங்கு/பறவை இனங்கள் ஒன்றையொன்று ஒலிக்குறிப்பால் அழை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

call, as beasts or birds, crop, sound

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர – குறி 217,218

மான் கூட்டம் மரத்தடிகளில் வந்து திரள, பசுக்களின் கூட்டம்
(தம்)கன்றுகளை அழைக்கும் குரலையுடையவாய் கொட்டில்கள் நிறையுமாறு நுழைய,

நாரை
ஐய சிறு கண் செம் கடை சிறு மீன்
மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை
தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும் – நற் 91/4-7

நாரை
மெல்லிய சிறுகண்ணில் சிவந்த கடைக்கண்ணையுடைய சிறிய மீன்களைப் பிடித்து
மேலே ஓங்கி உயர்ந்த கிளையின் மீதிருக்கும் கூட்டிலிருந்து
தாயை அழைக்கும் குஞ்சுகளின் வாய்க்குள் கொடுக்கும்

செம் கால் பல்லி தன் துணை பயிரும்
அம் கால் கள்ளி அம் காடு இறந்தோரே – குறு 16/4,5

செம்மையான கால்களையுடைய பல்லி, தன்னுடைய துணையை அழைக்கும்
அழகிய அடியைக் கொண்ட கள்ளிகளை உடைய பாலை நிலத்தைக் கடந்து சென்றோர்.

தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று பெருவிறல் தேரே – நற் 181/11,12

மாலை அணிந்த புரவி, பசுமையான பயிர்களை மிதித்து அழிக்க,
வந்தது தலைவனது தேர்,

கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின்
இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – மலை 6,7

துளைகள் இடையிடையே விடப்பட்ட, யானையின் துதிக்கை போன்ற குழலமைப்புக்கொண்ட,
இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.