Skip to content

சொல் பொருள்

(வி) 1. புகழ்ந்துகூறு, 2. வணங்கு, துதி,  3. சென்றுலாவு

சொல் பொருள் விளக்கம்

1. புகழ்ந்துகூறு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

praise, worship, adore, move around

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ
இடுக திறையே புரவு எதிர்ந்தோற்கு என
அம்பு உடை வலத்தர் உயர்ந்தோர் பரவ – பதி 80/9-11

வணங்காத பகைவர் முன்னே அவருக்கு எதிரே நின்று, இரண்டு பக்கங்களிலும் உலாவி,
“செலுத்துவீராக திறையை, உமக்குப் பாதுகாப்பினை வழங்குவதற்காக வந்திருப்பவருக்கு” என்று
வலக்கையில் அம்பினை உடைய வீரர்கள் புகழ்ந்து கூற,

பழையர் மகளிர் பனி துறை பரவ
பகலோன் மறைந்த அந்தி ஆரிடை – அகம் 201/7,8

பழையரது பெண்டிர் குளிர்ந்த துறைக்கண் தெய்வத்தினை வணங்கிநிற்க
ஞாயிறு மறைந்த அந்தியாகிய அரிய போழ்திலே

தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா – பதி 26/1

செல்வர்களின் தேர்கள் சென்று சேறுபட்ட நிலங்களில் ஏர்கள் சென்றுலாவி உழுதலை வேண்டா

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.