Skip to content

சொல் பொருள்

1. (வி.மு) வருந்தவேண்டாம்,  2. (பெ) விரைவான ஓட்டம், 3. (பெ) வருந்துதல்,

சொல் பொருள் விளக்கம்

வருந்தவேண்டாம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

don’t get distressed, getting distressed

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கி
பரியல் வாழி தோழி – ஐங் 392/1-3

மூங்கிலின் வனப்பை இழந்த தோள்களையும், வெயில் பொசுக்கியதால்
அழகிய நலம் தொலைந்த நெற்றியையும் பார்த்து
வருந்தவேண்டாம், வாழ்க, தோழி!

பரியல் நாயொடு பன் மலை படரும்
வேட்டுவன் பெறலொடு அமைந்தனை – அகம் 28/7,8

விரைவான ஓட்டத்தையுடைய வேட்டை நாயுடன் பல மலைகளையும் கடந்து செல்லும்
வேட்டைக்காரனைப் பெறுவது ஒன்றே போதுமென்று இருக்கிறாய்

என்னதூஉம்
பரியல் வேண்டா – புறம் 172/4,5

சிறிதளவும்
இரங்குதல் வேண்டா.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.