பரிவேடிப்பு

பொருள்

  • பரிவேடம் என்பதன் மற்றை வடிவம் ‘பரிவேடிப்பு’, ‘பரிவேடித்தல்’ என்பதும் அது.


விளக்கம்

பரிவேடம் என்பதன் மற்றை வடிவம் ‘பரிவேடிப்பு’, ‘பரிவேடித்தல்’ என்பதும் அது.

“மின்னணி மதியம் கோள்வாய்
விசும்பிடை நடப்பதேபோல்
கன்மணி யுமிழும் பூணான்
கடைபல கடந்து சென்றான்”

என்னும் சிந்தாமணியும் (1098) “கடைபல கடந்து விசும்பிடையிற் கோள்களிடத்தே, யுறையும் ஒளியணிந்த மதியம் அதனைக் கைவிட்டு நிலத்தே நடப்பதுபோலப் போந்தான் என்க. கோள் பரிவேடிப்புமாம்; வந்தவர்கள் சூழ நடுவே போவதற்குவமை” என்னும் உரையும் காண்க.

– இரா. இளங்குமரன்

Leave a Reply

Your email address will not be published.