Skip to content
பற்று

பற்று என்பதன் பொருள் விருப்பம்,விரும்பு, கைப்பற்று, வருவாய்.

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) விருப்பம், ஒரு பொருளின் மீதுள்ள அளவில்லா ஈடுபாடு ஆகும்; பிடிப்பு.

(வி) விரும்பு, கைப்பற்று, வருவாய், ஒருவர் திருப்பித் தர வேண்டிய பணத்தைப் பற்றிய விவரக் குறிப்பு;

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

attachment, desire, debit, grip

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. குறள் எண்:350

பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும்; உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும்.

பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் விருந்து ஓம்பி - குறள் 9/15

பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று - குறள் 28/9

பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும் - குறள் 35/17

பற்றுக பற்று அற்றான் பற்றினை அ பற்றை - குறள் 35/19

பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் - குறள் 44/15

பற்று இலர் நாணார் பழி - குறள் 51/12

பற்று அற்ற-கண்ணும் பழமை பாராட்டுதல் - குறள் 53/1

படி உடையார் பற்று அமைந்த-கண்ணும் மடி உடையார் - குறள் 61/11

முற்று ஆற்றி முற்றியவரையும் பற்று ஆற்றி - குறள் 75/15
பற்று ஆகின்று நின் காரணமாக - பரி 8/10

செய்ததன் பயம் பற்று விடாது - கலி 59/25

நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே - கலி 59/26

பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம் - அகம் 71/2

பாளை பற்று இழிந்து ஒழிய புறம் சேர்பு - அகம் 335/15

பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப - அகம் 339/4

புல் பனி பற்று விட்ட ஆங்கு - நாலடி:18 1/4

பற்று அமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே - இனிய40:32/2

பற்று இலனாய் பல்லுயிர்க்கும் பார்த்து உற்று பாங்கு அறிதல் - இனிய40:35/3

பற்று என்னும் பாச தளையும் பல வழியும் - திரி:22/1

பற்று அறாது ஓடும் அவா தேரும் தெற்றென - திரி:22/2

படை வேந்தன் பற்று விடல் - திரி:33/4

பற்றினான் பற்று அற்றான் நூல் தவசி எ பொருளும் - சிறுபஞ்:6/1

தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார் - மணி 8/57

நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர் - மணி 14/41

பற்று எனப்படுவது பசையிய அறிவே - மணி 30/92

வேட்கை சார்ந்து பற்று ஆகுமே - மணி 30/111

வேட்கை மீள பற்று மீளும் - மணி 30/126

பற்று மீள கரும தொகுதி - மணி 30/127

மூன்றாம் கண்டம் வேட்கை பற்று
கரும ஈட்டம் என கட்டுரைப்பவை - மணி 30/141,142

பேதைமை செய்கை அவாவே பற்று
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும் - மணி 30/184,185

அ பொருளிடை பற்று ஆகாது என்றும் - மணி 30/230

பற்று இறந்தானோ அல் மகனோ எனல் - மணி 30/242

தனித்து பார்த்து பற்று அறுத்திடுதல் - மணி 30/255

4. பயன்பாடு

பின்பற்று, நாட்டுப்பற்று, சமயப்பற்று, மதப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, கைப்பற்று.

காடு பற்றி எரிந்தது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *