Skip to content
பலவு

பலவு என்பதன் பொருள்பலா.

1. சொல் பொருள்

(பெ) பலா.

2. சொல் பொருள் விளக்கம்

மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

jack tree, Atrocarpus heterophyllus

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி – குறு 90/4

ஆண்குரங்கு தொட்டவுடன் வீழ்ந்த பூ மணக்கும் பலாப்பழத்தை

பலவு உறு குன்றம் போல - நற் 253/8

கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி - குறு 90/4

புடை தொடுபு உடையூ பூ நாறு பலவு கனி - குறு 373/6

பலவு காய் புறத்த பசும் பழ பாகல் - அகம் 255/13

பலவு பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து - அகம் 323/8

பாறிய சிதாரேன் பலவு முதல் பொருந்தி - புறம் 150/2

பலா அம் பழுத்த பசும் புண் அரியல் - பதி 61/1

பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் - அகம் 8/7

பைம் கறி நிவந்த பலவின் நீழல் - சிறு 43

தடவு நிலை பலவின் முழுமுதல் கொண்ட - பெரும் 77

தாழ் கோள் பலவின் சூழ் சுளை பெரும் பழம் - பெரும் 356

சேறும் நாற்றமும் பலவின் சுளையும் - மது 527

புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின்/நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல் - குறி 189,190

கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப - மலை 12

வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம் - மலை 337

கான பலவின் முழவு மருள் பெரும் பழம் - மலை 511

முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு - நற் 26/6

சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின்/சுளை உடை முன்றில் மனையோள் கங்குல் - நற் 77/5,6

பல் கோள் பலவின் சாரல் அவர் நாட்டு - நற் 102/5

மலை கெழு நாடன் கேண்மை பலவின்/மா சினை துறந்த கோல் முதிர் பெரும் பழம் - நற் 116/6,7

பயம் கெழு பலவின் கொல்லி குட வரை - நற் 192/8

செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி - நற் 201/5

கன்று கால்யாத்த மன்ற பலவின்/வேர் கொண்டு தூங்கும் கொழும் சுளை பெரும் பழம் - நற் 213/2,3

செம் கால் பலவின் தீம் பழம் மிசையும் - நற் 232/5

கொழும் சுளை பலவின் பயம் கெழு கவாஅன் - நற் 326/1

முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் - நற் 353/4

முன்றில் பலவின் படு சுளை மரீஇ - நற் 373/1

வேரல் வேலி வேர் கோள் பலவின்/சாரல் நாட செவ்வியை ஆகு-மதி - குறு 18/1,2

தீம் பழம் தூங்கும் பலவின்/ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே - குறு 83/4,5

பலவின் இரும் சினை கலை பாய்ந்து உகளினும் - குறு 153/2

கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின்/ஆர் கலி வெற்பன் வரு-தொறும் வரூஉம் - குறு 257/3,4

அகல் இலை பலவின் சாரல் முன்னி - குறு 352/3

மருங்கில் கொண்ட பலவின்/பெரும் கல் நாட நீ நயந்தோள் கண்ணே - குறு 365/5,6

சாரல் பலவின் கொழும் துணர் நறும் பழம் - ஐங் 214/1

நடுங்கு நடை குழவி கொளீஇய பலவின்/பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு - ஐங் 216/3,4

அத்த பலவின் வெயில் தின் சிறு காய் - ஐங் 351/1

பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனை - கலி 41/16

பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி - கலி 50/12

சாரல் பலவின் சுளையொடு ஊழ் படு - அகம் 2/3

ஆய் சுளை பலவின் மேய் கலை உதிர்த்த - அகம் 7/20

விழு கோள் பலவின் பழு பயம் கொள்-மார் - அகம் 12/8

முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும் - அகம் 91/16

கோள் அறவு அறியா பயம் கெழு பலவின்/வேங்கை சேர்ந்த வெற்பு_அகம் பொலிய - அகம் 162/19,20

தீம் பழ பலவின் சுளை விளை தேறல் - அகம் 182/3

பசும் பழ பலவின் கானம் வெம்பி - அகம் 189/1

பல் பழ பலவின் பயம் கெழு கொல்லி - அகம் 208/22

செம் வேர் பலவின் பயம் கெழு கொல்லி - அகம் 209/15

இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து - அகம் 282/11

பலவின் பழத்துள் தங்கும் - அகம் 292/14

பயிர்ப்பு உறு பலவின் எதிர் சுளை அளைஇ - அகம் 348/4

முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் - அகம் 352/1

தீம் சுளை பலவின் தொழுதி உம்பல் - அகம் 357/9

அள் இலை பலவின் கனி கவர் கைய - அகம் 378/20

செழும் கோள் பலவின் பழம் புணை ஆக - அகம் 382/10

இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே - புறம் 109/5

மன்ற பலவின் மா சினை மந்தி - புறம் 128/1

தீம் சுளை பலவின் மா மலை கிழவன் - புறம் 129/4

தடவு நிலை பலவின் நாஞ்சில் பொருநன் - புறம் 140/1

ஆசினி கவினிய பலவின் ஆர்வு-உற்று - புறம் 158/22

பனி வரை நிவந்த பாசிலை பலவின்/கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன் - புறம் 200/1,2

மன்ற பலவின் மால் வரை பொருந்தி என் - புறம் 374/5

தீம் சுளை பலவின் நாஞ்சில் பொருநன் - புறம் 380/8

பாலைகள் மா மகிள் பலவு சுள்ளிகள் - தேம்பா:1 37/2

கிளைகள் ஆர் நிழல் கெழும் பலா கனி எலாம் தீம் தேன் - தேம்பா:25 32/2

முள் புறத்தில் உள் முதிர் சுவை சுளை பலா இனிதோ - தேம்பா:29 107/2

மன்ற பலவின் சுளை விளை தீம் பழம் - ஐந்70:4/1

பலவின் பழம் பெற்ற பைம் கண் கடுவன் - திணை50:10/1

ஓங்கல் விழு பலவின் இன்பம் கொளீஇய - கைந்:4/1

பலா எழுந்தபால் வருக்கை பாத்தி அதன் நேர் - திணை150:29/1

தீம் சொல் மழலையாய் தேனார் பலா குறைத்து - பழ:371/3

சூல் அடி பலவின் சுளை தூங்கு தேன் - கிட்:15 40/1

கோட்ட தேம் பலவின் கனி கூன் சுளை - கிட்:15 45/2

பத்துநால் என அடுக்கிய உலகங்கள் பலவின்
மெத்து யோனிகள் ஏறினும் வெற்றிடம் மிகுமால் - யுத்4:41 17/1,2

தரும் கனி பலவொடு தாழை இன் கனி - பால:5 40/3

பெரிய மா கனி பலா கனி பிறங்கிய வாழை - அயோ:10 33/2

சினை துணர் முழவு அன பலவின் தீம் கனி - சிந்தா:3 825/1

சொன்ன நல் மலரும் அல்லனவும் வீழ் பலவின் சூழ் சுளைகளும் - சிந்தா:7 1652/1

அள் இலை பலவின் அளிந்து வீழ் சுளையும் கனிந்து வீழ் வாழையின் பழனும் - சிந்தா:10 2109/1

திண் நிலை பலவின் தேம் கொள் பெரும் பழம் கொண்டு கீறி - சிந்தா:13 2724/3

பழுத்த தீம் பலவின் கனி வாழையின் - சிந்தா:13 3069/1

பலவு ஈன்றன முள் உடை அள் அமிர்தும் - சிந்தா:5 1191/3

ஆர்புறு பலா பழம் அழிந்த நீள் களம் - சிந்தா:1 58/3

மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய - மது:11/84

பலா அமல் அசும்பின் பய மலை சாரல் - இலாவாண:18/3

சினை பெரு மாவும் பணை கால் பலாவும்
கொழு முதல் தெங்கொடு முழுமுதல் தொலைச்சி - மகத:19/39,40

கலை வன் பலவின் சுளை கீறி களிப்போடு அளிக்கும் காந்தார - வில்லி:5 37/2

செம் பலவு ஆமிரம் கதலி தீம் கனி - வில்லி:11 91/3

தறித்தனர் சினை பலவு தாழை பனை சூதம் - சீறா:4130/3

நெய் அளை பலவு ஒன்றாக நிறைந்த பாத்திரத்தை தூய - சீறா:4707/3

தாறு கொண்ட பைம் கதலி தேமா பலா தரு தேன் - சீறா:72/1

பலவின் கனி பணை மீறிய மா மர முருகின் கனியுடனே நெடு வாளைகள் - திருப்:136/13

பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை வயல் கமுகு அடர் பொழில் திகழ் - திருப்:163/15

கரிய ஊக திரள் பலவின் மீதில் சுளை கனிகள் பீறி புசித்து அமராடி - திருப்:643/7

செக தலமு நிகர் சிகரி பலவு நல கெச புயக திசையும் உடன் உருக வரு கடை நாளில் - திருப்:1094/6

தான் பலா சுளையின் சுவை கண்டு இதழ் உண்டு மோகம் - திருப்:475/6

அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பையுடன் - திருப்:495/19

மகிழ் மாலதி நாவல் பலா கமுகு உடன் ஆட நிலா மயில் கோகில - திருப்:721/13

வடிவு உலாவி ஆகாசம் மிளிர் பலாவின் நீள் சோலை வனச வாவி பூ ஓடை வயலோடே - திருப்:694/7

நெட்டு இலைய கரும் கமுகின் செம் காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீன - நாலாயி:1185/3

தூங்கு தண் பலவின் கனி தொகு வாழையின் கனியொடு மாங்கனி - நாலாயி:1845/3

இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலா பழம் தந்து - நாலாயி:142/3

செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ் - நாலாயி:1258/3

வாளை புதைய சொரிந்த பழம் மிதப்ப வண் பலவின்
நீளம் முதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்து உகளும் - 4.மும்மை:4 4/3,4

பாங்கு நீள் குலை தெங்கு பைம் கதலி வண் பலவு
தூங்கு தீம் கனி சூத நீள் வேலிய சோலை - 4.மும்மை:5 27/3,4

பந்தியின்-வாய் பலவின் சுளை பைம் தேனொடும் கடுவன் - திருக்கோ:99/2

உழைதரு நோக்கியர் கொங்கை பலாப்பழத்து ஈயின் ஒப்பாய் - திருவா:6 46/1

மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலி தாயம் - தேவா-சம்:30/3

பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே - தேவா-சம்:726/4

பக்கம் வாழை பாய் கனியோடு பலவின் தேன் - தேவா-சம்:1072/1

கோள் பலவின் தீம் கனியை மா கடுவன் உண்டு உகளும் குறும்பலாவே - தேவா-சம்:2235/4

கந்தம் ஆய பலவின் கனிகள் கமழும் பொழில் - தேவா-சம்:2738/3

கொக்கு வாழை பலவின் கொழும் தண் கனி கொன்றைகள் - தேவா-சம்:2796/3

தழை வளர் மாவின் நல்ல பலவின் கனிகள் தயங்கும் - தேவா-சம்:3432/2

குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா - தேவா-சம்:3433/3

முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவை குருளைகள் - தேவா-சம்:3598/3

ஒண் பலவின் இன் கனி சொரிந்து மணம் நாறு உதவி மாணிகுழியே - தேவா-சம்:3630/4

வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன் - தேவா-சுந்:30/3

பலவும் நீள் பொழில் தீம் கனி தேன் பலா மாங்கனி பயில்வு ஆய - தேவா-சம்:2651/1

வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார் - தேவா-சம்:3596/3

தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை - தேவா-சம்:4082/3

பாடு ஆர்ந்தன மாவும் பலாக்களும் சாடி - தேவா-சுந்:127/1

ஏறி மாவின் கனியும் பலாவின் இரும் சுளைகளும் - தேவா-சம்:2708/3
பலா
பலா

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *