Skip to content
பலாசம்

பலாசம் என்பதன் பொருள்புரசமரம்.

1. சொல் பொருள்

(பெ) புரசமரம், பூ

பார்க்க புழகு முருக்கு

2. சொல் பொருள் விளக்கம்

பலாசம் என்னும் மலர் கல்யாண முருங்கை (முருக்க மரம்) ( butea frondosa ) மலரைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Palas-tree, Butea frondosa; butea monosperma

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பகன்றை பலாசம் பல் பூ பிண்டி – குறி 88

துன்னினர் பலாசில் செய்த துடுப்பின் நெய் சொரிந்து வேட்ப - சிந்தா:3 834/2

புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய் பலாசம் கொம்பின் - தேவா-அப்:274/1

பாங்கு படவே பலாச பலகையில் - திருமந்:999/2

பூம் தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி திகழ் சோலை - திருப்:620/7

புண்ணிய பலாசின் கண் நிறை சமிதை - இலாவாண:3/14

பாற்படு பலாசின் நோக்கமை கொழு நிழல் - நரவாண:2/16

தணக்கும் பலாசும் கணை கால் ஞெமையும் - உஞ்ஞை:52/42

பகன்றையும் பலாசும் அகன் தலை புழகும் - இலாவாண:12/27

பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார் - சுந்:2 68/4
புரசு
புரசு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *