சொல் பொருள்
(வி) பார்க்க : பழுநு
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : பழுநு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 1. நிறைவடை பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி நட்டனை-மன்னோ முன்னே இனியே – புறம் 113/3,4 விரும்பியபடியே தரும் மிக்க செல்வம் நிறைவுபெற்று எம்மோடு நட்புச்செய்தாய் முன்பு, இப்பொழுது 2. முதிர்வடை வாங்கு அமை பழுனிய நறவு உண்டு – நற் 276/9 வளைந்த மூங்கிலாலான குப்பிகளில் முதிர்ந்து விளைந்த கள்ளினை உண்டு 3. முற்றுப்பெறு புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப – பதி 41/1,2 முறுக்கேற்றிய நரம்பினையுடைய, இனிய இசை முற்றுப்பெற்ற வளைந்த அமைப்பினையுடைய நல்ல யாழினை ஏவல்இளையவர்கள் தாங்கிநிற்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்