Skip to content

சொல் பொருள்

(வி) பார்க்க : பழுநு

சொல் பொருள் விளக்கம்

பார்க்க : பழுநு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

1. நிறைவடை

பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி
நட்டனை-மன்னோ முன்னே இனியே – புறம் 113/3,4

விரும்பியபடியே தரும் மிக்க செல்வம் நிறைவுபெற்று
எம்மோடு நட்புச்செய்தாய் முன்பு, இப்பொழுது

2. முதிர்வடை

வாங்கு அமை பழுனிய நறவு உண்டு – நற் 276/9

வளைந்த மூங்கிலாலான குப்பிகளில் முதிர்ந்து விளைந்த கள்ளினை உண்டு

3. முற்றுப்பெறு

புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப – பதி 41/1,2

முறுக்கேற்றிய நரம்பினையுடைய, இனிய இசை முற்றுப்பெற்ற
வளைந்த அமைப்பினையுடைய நல்ல யாழினை ஏவல்இளையவர்கள் தாங்கிநிற்க,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.