சொல் பொருள்
(பெ) மங்கலான மஞ்சள் நிறம்,
சோளத்தட்டை, கரும்புத் தட்டை உள்ளீட்டைப் பழுப்பு என்பது பொது வழக்கு
‘சீழ்’
சொல் பொருள் விளக்கம்
சோளத்தட்டை, கரும்புத் தட்டை உள்ளீட்டைப் பழுப்பு என்பது பொது வழக்கு. மகளிர் காது குத்திய நாளில் காதுத் துளையை அகலப்படுத்தப் பழுப்பு வைத்தல் வழக்கம். இங்கே பழுப்பு என்பது ‘சீழ்’ என்னும் பொருளில் வட்டார வழக்காக உள்ளது. பழுத்து வழியும் சீழைப் பழுப்பு என்றனர் போலும். இது விளவங்கோடு வட்டார வழக்கு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pale yellow colour of fruits
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு தலை துருவின் பழுப்பு உறு விளை தயிர் – அகம் 394/2 சிறிய தலையை உடைய செம்மறியாட்டின் பழுப்பு நிறம் வாய்ந்த முற்றிய தயிர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்