Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நெருக்கம், 2. படர்ந்து பரவியிருத்தல், 3. அடர்ந்த கொடி

சொல் பொருள் விளக்கம்

1. நெருக்கம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

denseness, thickness, pervasiveness, dense clustered creeper

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய் – குறு 364/1

இறுகப் பின்னிய நெருக்கமான கொடிப்பிரம்பினைப் போல் வரிவரியான முதுகினைக் கொண்ட நீர்நாய்

தாளி தண் பவர் நாள் ஆ மேயும் – குறு 104/3

தாளிப் புல்லின் குளிர்ந்த படர்கொடியைக் காலையில் பசுக்கள் மேயும்

குறுவிழி கண்ண கூரல் அம் குறு முயல்
——————— ———————–
குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி – அகம் 284/2-4

குறிய விழி பொருந்திய கண்களையும் கூரிய மயிரினையுமுடைய குறிய முயல்கள்
—————— —————————-
வளைந்த அழகிய செவியினவாகிய காய்களைக் கொண்ட அடர்ந்த கொடிகளுட் புகுந்து கிடந்து உறங்கி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *