சொல் பொருள்
(பெ) 1. தேர்ப்பாகன், 2. விலங்கின் மீது ஊர்பவன், 3. யானைப்பாகன்
சொல் பொருள் விளக்கம்
1. தேர்ப்பாகன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
charioteer, a rider on an animal, rider, mahout
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன மணி நெடும் தேர் பாகன் இயக்க – நற் 19/6 வரிசையான மணிகள் கொண்ட நெடிய தேரினை அதன் பாகன் இயக்க செல் விடை பாகன் திரிபுரம் செற்று_உழி – பரி 23/82 விரைந்து செல்லும் எருதாகிய ஊர்தியையுடையோன் முப்புரத்தை அழித்தபோது பெரும் களிறு இழந்த பைதல் பாகன் – புறம் 220/2 பெரிய களிற்றை இழந்த வருத்தத்தினையுடைய பாகன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்