சொல் பொருள்
(பெ) 1. கசப்புச்சுவைக் காய், அதையுடைய ஒருவகைக் கொடி, 2. பலா
சொல் பொருள் விளக்கம்
1. கசப்புச்சுவைக் காய், அதையுடைய ஒருவகைக் கொடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bitter gourd creeper, jackfruit tree
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇ – அகம் 156/5 பாகலின் சிறந்த கொடியைப் பகன்றைக் கொடியுடன் அறுத்து பைம் பாகல் பழம் துணரிய செம் சுளைய கனி மாந்தி – பொரு 191,192 பசிய பாகலான பலாப்பழத்தினுள் கொத்தாகவுள்ள, சிவந்த சுளைகளைக் கொண்ட பழத்தைத் தின்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்